Pages

Monday, May 28, 2012

பிரம்மா...!




மழை இன்னும் விட்டபாடில்லை. காலையிலிருந்து நச நசத்துக் கொண்டிருக்கும் மழையை பலர் குறை சொல்லி நகர்ந்து கொண்டிருந்ததை ஜன்னலிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நானும் வெளியில் செல்ல வேண்டும். மழை நின்றவுடன் செல்லலாம் என்று காத்திருந்தேன். மழை கோட்டை போட்டுக் கொண்டு வண்டி ஒட்டி செல்வது எனக்கு சுத்தமாக பிடிக்காது, ஏனென்றால் மழை நின்று மத்தியானமே வெயில் சுளீரென்று அடிக்கும் போது கோட்டை கழட்டி வண்டியின் பின்னால் சுமந்து செல்ல ஒரு மாதிரி இருக்கும்.

டைரக்டர் இளைய நிலவன் சாரே எனக்கு நேற்று போன் போட்டு வந்து கதை சொல் என்று சொல்லியிருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களில் கதைகளை சுமந்து கொண்டு நான் ஏறாத படி இல்லை. கதை பிடிக்கவில்லை என்று திருப்பி அனுப்பும் போது ஏற்படும் வலியை விட அதே கதையை உல்டா செய்து திரைப்படமாக்கி சில இயக்குனர்கள் வெற்றி பெறும் போது ஏற்படும் வலி இயலாமையிலிருந்து வெடித்து சிதறுவது.

நமது சமூகத்தின் பிரச்சினை என்ன தெரியுமா? பணம் இருப்பவனும், புகழ் இருப்பவனும் எதைச் செய்தாலும் அதை அவர்களின் சொந்த சரக்காகவே நாம் கருதி விடுவதுதான். எனக்கு தெரிந்து ஒரு பிரபல இசையமைப்பாளருக்கு அவரின் உதவியாளரே மெட்டுக்களை போட்டுக் கொடுப்பதாகவும் அவர் பெயர் வெளியில் அதிகம் வராமல் இவரின் புகழ் அழுந்திப்பிடித்து வைத்திருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் ஒருவர் காதில் ஒருவர் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன்.

திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு அதிர்ஷ்டம் வேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள். அதிர்ஷ்டம் என்பதற்கு பல அர்த்தங்கள் இங்கே இருக்கின்றன, அதைப் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தால் சினிமா துணை நடிகைகளின் வாழ்க்கையில் ஆரம்பித்து டாஸ்மார்க் பின்புறம் இருக்கும் கீற்றுக் கொட்டகையில் முட்டை மசாலா வாங்கிக் கொடுப்பது வரை நாம் பேச வேண்டி வரும்.

கதை எழுத புத்தி தேவையில்லை என்று என்னுடைய ஆதர்சன எழுத்தாளர் அடிக்கடி கூறுவார். கதை எழுத அனுபவமும் புறத்தில் நிகழ்பவற்றை தாக்கத்தோடு உள்வாங்கிக் கொள்ளும் தன்மையும் இருந்தால் போதும்....; இந்த 35 வயது என்னை மென்று தின்று விடாமால் இன்னமும் அசை போட்டுக் கொண்டிருப்பதால் அனுபவங்களைக் கோர்க்க முடிகிறது என்னால். பெரும்பாலும் அனுபவம் என்பது எனக்கு வலி என்றே உரக்க வாழ்க்கைச் சொல்லி கொடுத்து இருக்கிறது.

நெருக்கமாய் காதலித்தவள் நிஜமாய் வேறு ஒருவனை கைப் பிடித்துப் போன போது அதை அவள் வாழ்க்கை என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தாள். உருகி, உருகி காதலித்தவளை உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தவளை, கேசம் கோதி கன்னம் கடித்தவளை, வாழ்க்கை பணம், வசதி, உத்தியோகம் என்று பிரித்துப் போட்ட அன்று இரவு தனித்து நான் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தேன். ஒரு ஒரு ஆஃப்க்கும் மேலாக ராயல் சேலஞ்சை நான் காலி செய்திருந்தும் அவளின் இன்னொருத்தனோடான முதல் இரவு எனக்கு கொடுத்த வலியை காகிதத்தில் கதையாகத்தான் நான் எழுத முடிந்தது.

அனுபவங்கள், அனுபவங்களென்று வாழ்க்கை என்னை நிறைத்துப் போட்ட போதெல்லாம் நான் காகிதத்தை காதலிக்கத் தொடங்கினேன்....எழுத்துக்களை வார்த்தைகளாக்கி வலிகளை காகிதத்தில் பரப்பிப் போட்டேன். இது ஒரு பயிற்சி....பசியோடு இருக்கையில் பசிக்கு உணவு தேடாமால் பசியை உற்று  நோக்கி குடலின் ஏற்ற இரக்கங்களை, அதில் சுரக்கும் அமிலங்கள் குடலை எரித்துப் போடுகையில் புத்தியில் நடக்கும் தடுமாற்றங்களை மெல்ல கண் மூடி அனுபவித்து நான் எழுத்தாக்கி இருக்கிறேன். 

திருமணமாகி ஐந்து வருடத்தில் கணவனை இழந்து விட்டதாலேயே விதவைப் பட்டத்தை அவள் கேட்காமலேயே அவளுக்கு கொடுத்த கதையை கீதா என்னிடம் கூறிய பொழுது சிகரட்டோடு சேர்த்து அவளது வாழ்க்கையையும் எனக்குள் உறிஞ்சிக் கொண்டேன். ஒரு மழைக்காய் ஒதுங்கி நின்ற பேருந்து நிலையத்தில் எதேச்சையாக அவளோடு ஆரம்பித்த பேச்சு அவள் வீட்டுக் கட்டிலில் என்னைக் கொண்டு போய் விட்டதில் முந்திக் கொண்டது காதலா? காமமா என்று எனக்கு இதுவரை சரியாய் சொல்ல முடியவில்லை...

காலை பத்து மணியிலிருந்து அவளோடு சுகித்து சுகித்து அவள் உடலின் வெம்மையை எனக்குள் வாங்கிக் கொண்டு தவணை முறையில் அவளை உச்சத்துக்கு தள்ளி அவள் துடித்ததை நான் ரசித்து ரசித்து வெடித்து சிதறுகையில் உள்ளுக்குள் இருந்த கதாசரிய புத்தி அந்த அனுபவத்தை அப்படியே கபளீகரம் செய்து கிரகித்துக் கொண்டது. சிறு பிள்ளையைப் போல அவளின் மார்பகம் பற்றி உறிஞ்சுகையில் எட்டு வயதில் இறந்து போன அம்மாவின் முகம் வந்ததை என்னால் மறுக்க முடியாது.

உடல் சோர்ந்து, மனம் நிறைந்து காமத்தில் இருவரும் கலைந்து கிடக்கையில் மெல்ல நகர்ந்து ஒரு சிகரட்டை உதட்டில் பொருத்தி அவளின் நிர்வாணத்தை கண்களால் அளவெடுத்து புத்தியால் மீண்டுமொரு முறை அவளை சுகித்துக் கொண்டிருக்கையில் மார்புகள் குலுங்க பதறி எழுந்து ஒரு கையால் பாவாடையையும், ஜாக்கெட்டையும், சேலையையும் பற்றி இழுத்தபடி " மணி நாலாகப் போகுது பிள்ளை ஸ்கூல்ல இருந்து வந்துடும்..." என்று சொன்ன போது சுரீர் என்று வலித்ததை அவளிடம் சொல்லாமல்....அவளை இழுத்து முத்தமிட்டு என் அன்பை அவளது உதட்டுக்கு இடமாற்றினேன்.

எத்தனை முறை கூடினோமென்று கணக்கு வழக்கில்லாமல் அவளோடு படுத்து எழுந்து, திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்ட பொழுது அவள் வேண்டாம் என்று சொல்லி விட்டு, என் பெயர் என்ன என்று கேட்ட போதுதான் தெரிந்தது அவள் என் பெயர் தெரியமாலேயே டேய் எழுத்தாளா என்று மட்டும் சொல்லியே அந்த இரண்டு மூன்று மாதங்களும் என்னோடு புணந்திருக்கிறாளென்று...

மீண்டும் வலித்தது.

உறவுக்கு உணர்ச்சிதான் தேவையாயிருந்திருக்கிறது. பெயரும் ஊரும் தேவைப்பட்டிருக்கவில்லை. சுயநலமாய் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர்  இறுக்கப்பிடித்து  வைத்துக் கொண்டு தனது தேவைகளை உடலாலும், பொருளாலும் தீர்த்துக் கொள்ள பெயர், சாதி, மதம், ஊர், உத்தியோகம் எல்லாம் தேவைப்படுகிறது. இங்கே எனக்கும் கீதாவுக்கும் அப்படியான ஒரு தேவைகளுமே இருந்திருக்கவில்லை....பல நேரம் அவள் எனக்கு உடல் பசியை மட்டுமின்றி வயிற்றுப் பசியையும் போக்கியிருக்கிறாள். . சில நேரம் அவளுக்கு நானும் உதவி இருக்கிறேன்....

பரஸ்பரம் அன்பு செலுத்துவதில் நான் ஆர்வமாயிருந்தேன். அவள் அன்பைப் பெறுவதில் மும்முரமாய் இருந்தாள். அவள் எங்கு வேலை செய்கிறாள், எங்கு போகிறாள் வருகிறாள் என்று கூட எனக்கு கேட்க தோன்றவில்லை. அந்த அடை மழையில் பேருந்து நிறுத்ததில் வந்து ஒதுங்கியதுப் போலவே அவளோடான உறவும் அமைந்து போனது. ஏன் பேருந்து நிறுத்ததிற்கு வந்தாய் என்று நான் கேட்பது எவ்வளவு அபத்தமோ? எங்கிருந்து வருகிறாய் என்று கேட்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ? அவ்வளவு அபத்தம்...அவளிடம் நானும், என்னிடம் அவளும் ரிஷி நதி மூலங்களை கேட்டறிவது....

உலகின் மைய அச்சு காமம். காமத்தை மையமாக வைத்தே இந்த உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.  இனப்பெருக்கம் அதாவது பல்கிப் பெருகுதல் என்பதே இந்த பிரபஞ்சத்தின் மூலப் பிடிப்பு....இதை யாரும் மறுக்கவே முடியாது. முழுதாய் நிறைவு பெறும் வரையில் காமம் ஒரு மனிதனை விடவே விடாது. பிறப்பிலேயே காமம் என்ற ஒன்று ஒரு மனிதனுக்குப் புத்தியில் கழிக்கப்பட்ட ஒன்றாய் இருக்குமெனில் அவன் காமத்தின் அருகே வராமேலேயே போக சாத்தியங்கள் உண்டு. அப்படி இல்லையென்றால் காமம் ஒவ்வொரு மனிதனையும் அழுந்தப் பிடித்து வைத்துக் கொள்ளும் என்பதில் மாற்றமே இல்லை. ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் ஈர்ப்பது இயற்கையின் விதி....இதன் மையம் காமம் .

ஒரு நாள் கதை சொல்லப் போன இடத்தில் இயக்குனரும் தயாரிப்பாளரும் நான் உணர்வாய் ஆக்கி வைத்திருந்த படைப்பை ஏளனம் செய்து சிரித்து விட்டு என்னை கதை எழுதுவதற்கு பதிலாக கையேந்தி பவனில் போய் தட்டு, டம்ளர் கழுவி பிழைத்துக் கொள் என்று எக்களித்து சிரித்து, அவர்களின் போதையில் என்னை ஊறுகாயாய் ஆக்கிய போது நான் எனக்கு போதையை ஊறுகாயாய் ஆக்கிக் கொள்ள ராவாய் ஒரு குவார்ட்டரை தொண்டை அறுக்க, நெஞ்சு அறுக்க உள்ளுக்குள் ஊற்றி கொண்டு, ஒரு ஊறுகாய் பாக்கெட்டை வாங்கி கடித்துக் கொண்டு கீதாவின் வீட்டுக் கதவை தட்டிய இரவு பதினொரு மணியில் போதை தெளியும் வரை கதவு திறக்கப்படாமல் இருந்தது. பக்கத்து வீட்டிலிருந்து சப்தம் கேட்டு வந்த ஒரு கேரளத்து சேட்டன் கீதா வீட்டை காலி செய்து சென்று விட்டதை சொல்லி விட்டு....படாரென்று கதவை அடைத்து விட்டான். அவனுக்கு என்ன அவசரமோ....?!!!!!

அன்றைய என் இரவு தெருவோரத்தில் உடல் பசியோடும் வயிற்றுப் பசியோடும் தகித்துக் கிடந்தது எனக்கு பக்கத்தில் படுத்துக் கிடந்த தெரு சொறி நாயைப் போல! வயிற்றுப் பசி உடல் பசியை தின்று போட்டது....! சிகரட்டை இழுத்து இழுத்து நுரையீரல் நிக்கோடின் துகள்களால் நிரம்பிப் போய் மூளை வரண்டு, சுய நினைவை பறித்துக் கொள்ள எப்போது என்ன எனக்கு ஆனது என்று தெரியாமல் மறு நாள் எட்டு மணி சுரீர் வெயிலில் ஒரு போலிஸ்காரனின் லத்தி என் முதுகில் தட்டிய போது விழித்தேன்.....

எவ்வளவு நிகழ்வுகள்....எவ்வளவு வலிகள்....!

அந்த படத்திற்கு என் கதை ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் தேர்வாகி இயக்குனர் எனக்கு முன் பணம் கொடுத்த போது கூட எனக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையே இல்லை. அந்தப் படம் வெற்றிப் படமானபோது லேசாய் எனக்குள் துளிர் விட்ட நம்பிக்கை பல படங்களுக்கு கதை கேட்டு இயக்குனர்கள் என்னை அணுகத் தொடங்கியபோது கொஞ்சம் வேர் விட்டு வளரத் தொடங்கியது. இரண்டு மூன்று படங்களுக்கு  என் கதைகள் வொர்க் அவுட் ஆகி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தான் இளைய நிலவன் சார் என்னை வரச்சொல்லி இருக்கிறார் அவரின் படத்திற்காக...

சூட்டோடு சூட்டாக என் அனுபவங்களை சிறு கதை தொகுப்புகளாக்கி காசு பார்க்க ஒரு பதிப்பகம் முன் வந்தது. கீதாவோடோன என் நாட்களையும் சேர்த்து " மழையில் நனைத்த உறவுகள் " என்று ஒரு புத்தகம் போட்டு விற்று தீர்ந்து போக மீண்டும்....மறு பதிப்பு செய்யப் போவதாய் அந்த பதிப்பக ஆசிரியர்
 கூறினார். வாழ்க்கையில் வெற்றியை நாம் ஒரு வெறிநாயாயைப்
போல துரத்திக் கொண்டு ஓடும் போது அது நம்மை திரும்பிப் பார்ப்பதே இல்லை. ஏதோ ஒரு கணத்தில் ஓடிய நாய் நம்மை திரும்ப துரத்துவது போல வெற்றியும் நம்மை எதேச்சையாக துரத்த ஆரம்பிக்கிறது....

வாழ்க்கையில் புத்திசாலிகள் ஒரு போதும் கதை எழுத வருவதில்லை. வலிகள் நிறைந்தவனே படைக்கிறான்.  வலிக்கும் இரணங்களோடு வாழப் பழக்கப்பட்டவன் மற்றவர்களின் வலியையும் தனது வலியாக்கிக் கொள்கிறேன். அந்த உணர்தலில் ஒரு படைப்பாளி காக்கையாகவும், குருவியாகவும், நாயாகவும், குடிகாரனாகவும், ஞானியாகவும், இன்னும் எல்லாவுமாகவும் நின்று படைப்பதை சர்வ சாதரணமாகச் செய்கிறான்.


அவனே பிரம்மா...!

மழை சுத்தமாக நின்று போக....நான் வீட்டை பூட்டி விட்டு பைக் ஸ்டாண்ட் எடுத்து விட்டு கிக்கரை உதைத்தேன்.....! மனதின் ஓரத்தில் கீதா வலியாய் நின்று கொண்டிருந்தாள்....அவளை எப்படியாவது மீண்டும் சந்தித்து என் வாழ்க்கைக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும்.....மனம் ஆக்ரோஷித்தது கைக்கு பரவி ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன்.......


தேவா. சு


Photo Courtesy: Amar Ramesh 

Monday, May 21, 2012

படைப்புகள் விற்பனைக்கு....!



எழுத மட்டும் தெரிந்தால் போதாது. எப்படி மஸ்கா அடிக்க வேண்டும், கூட்டத்தில் எப்படி கோவிந்தா போடவேண்டும், இன்னமும் தெரிந்த தெரியாத விசயங்களை பற்றி எல்லாம் மேதாவியாய் நுனிப்புல் மேய வேண்டும் இது எல்லாம் இல்லாமல் உன்னால் மேலே வர முடியாது என்று கூறிய ஜீ ஒரு பிரபல புகைப்படக் கலைஞன். என்னை என் எழுத்துக்காகவே நேசிக்கும் எனக்குத் தெரிந்த என் நண்பன்.

" எல்லா இடத்திலும் திறமை இருந்தால் மேலே தன்னாலேயே வர முடியாது கவி " என்று என் தோள் தொட்டு திருப்பினான். கவிஅழகன் என்னும் என்னை கவி...கவி என்று அவன் அழைக்கும் போது உள்ளுக்குள் இருந்து நிஜமாகவே கவிதைகள் கட்டுக்கள் அறுத்து சீறிப்பாயும் எனக்கு. எனக்கு அரசியல் நாடகமாடத் தெரியாது. வேண்டுமென்றே பெண்களிடம் போய் வழியத் தெரியாது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் என்னைப் பற்றி நாலு பேரிடம் போய் வாய் பிளந்து தற்புகழத் தெரியாது. இது எல்லாம் எனக்கு நிறைகள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் ஜீ அவை எல்லாம் குறைகள் என்று சொல்கிறான்.

கடற்கரைக் காற்றில் கேசம் எப்படி பறக்கிறதோ அதே போல மனமும் சிறகடிப்பதை நான் அனுபவித்துக் கொண்டிருக்கையில் கடலை பொட்டலத்தை வாங்கி என் கையில் ஒன்றை திணித்து விட்டு இன்னொன்றை பிரித்து நிதானமாய் கடலையை எடுத்து கொறிக்க ஆரம்பித்திருந்தான் ஜி. ஜி....ஒரு பிறவிக் கலைஞன். அவன் எனக்கு நண்பனாக கிடைத்தது மிகப்பெரிய பேறு. புதிய பாரதம் பத்திரிகையில் அவன் எடுத்த ஒரு புகைப்படத்திற்கு கவிதை எழுதச் சொல்லி எக்குத்தப்பாய் என் கவிதை அதற்கு முதல் பரிசு பெற.....அந்தத் தொடர்பில் அவனோடு நான் ஐக்கியமாகிப் போனேன். என்னை விட இரண்டு வயது கூடுதலாய் இருந்தாலும் வாடா, போடா என்று பேசுமளவிற்கு நாங்கள் நெருங்கியதற்கு.........ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது...

அவன்..
கவித்துவமான மனதினை ...
கேமராவில் சுமக்கிறான்....
நான்...
காகிதத்தில் சுமக்கிறேன்...
அவ்வளவுதான்...!

மற்றபடி இரண்டு பேரும் ஒன்றுதான்...! கலை ஒன்று, அது ஜனிக்கும் இடமும் ஒன்று ஆனால் அதை வெளிப்படுத்தும் இடம் வெவ்வேறு. கமர்சியல் வாழ்க்கையில் அவன் ஜொலிக்கத் தொடங்கிய நேரம் என்பது நிறைய, நிறைய பொய்களோடும், பிடிக்காத விசயங்களோடும அவன் சமரசம் செய்து கொண்டு கை கோர்த்த இடங்கள்தான் என்று அவன் சொன்ன போது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

என்னைப் பொறுத்தவரை ஒரு படைப்பாளி என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்ற சில வரைமுறைகள் என்னைக் கேட்காமலேயே என் புத்தியில் ஏறி சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது. ஒரு படைப்பாளி யாதொரு சமரசமும், யாதொரு மனிதர்களிடமோ அல்லது சூழல்களிடமோ கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பவன் நான். ஒரு படைப்பு என்பது எப்போதும் படைப்பாளியின் மேதாவித் தனத்தை காட்டும் வகையில் ஒரு அலங்கார ஊர்வலமாகவோ அல்லது வாசகனுக்குப் பிடிபடாத விசயத்தை எழுதி விட்டு அறிவின் உயரம் இருப்பவர்கள் ஏறி வந்து நின்று வாசித்துக் கொள்ளுங்கள் என்று திண்ணமாக சொல்லவோ கூடாது என்று நினைப்பவன்.

என் எழுத்து புரியவில்லை என்று மிகைப்பட்ட வாசகர்கள் என்னிடம் சொன்ன போது, ஒரு சில வாசகர்கள் அதை புரிந்து கொண்ட போதும் நான் வேறு ஒரு தளத்தில் நின்று கொண்டு எழுதிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். சிக்கலான எழுத்துக்கள் எல்லோருக்கும் புரிவதில்லை என்பதை எனது குறையாக நான் பார்க்கத் தொடங்கிய முதல் நாளில் இருந்து ஒரு எழுத்து சாமானியனை சென்றடைவதோடு மட்டுமில்லாமல் அவனை தலைகீழாக புரட்டிப் போடவேண்டும் மற்றும் அவனை ஒரு வாரமேனும் தூங்க விடக் கூடாது என்ற ஒரு உணர்வு வலுவாய் எனக்குள் ஊறிப் போனது.

மேலை நாட்டு திரைப்படங்களையும், தத்துவங்களையும் வாசித்து விட்டு அந்த வார்த்தைகளை கொண்டு வந்து இங்கு கடை பரப்பி வாசிப்பாளனை குழப்ப நான் எப்போதும் விரும்பியது இல்லை. வாசிப்பவனுக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்காத எழுத்துக்கள் எவ்வளவுதான் நல்ல எழுத்தாக இருந்தாலும் அது படைப்பாளியின் கர்வத்தையே எடுத்து இயம்புகின்றன.

நவீனம் என்ற பெயரில் எழுத்துக்களை தடம் புரட்டி விட்டு வாசகனை உங்கள் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றார் போல சிந்தித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது ஒரு கலை என்றாலும் கூட அது ஒரு பொறுப்பில்லாத சுயநலம் என்றே எனக்கு தோன்றி இருக்கிறது.

எது எப்படி இருந்தால் என்ன வாசகனிடம் எழுத்து சென்று சேர பலரின் காலைப் பிடிக்கவும் ஜால்ரா தட்டவும் வேண்டும் என்று ஜி சொல்வது வாழ்க்கையை நகர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் சரிதான் என்றாலும்....

ஜி போன்ற புகைப்படக் கலைஞர்கள் எப்போதும் வெளியே காணும் காட்சியை பார்த்து விட்டு அதை புகைப்படமாய் ஆக்குபவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் தனக்குள்ளேயே காட்சிகளை கொண்டிருக்கிறார்கள். ஒரு புகைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்று எப்போதும் ஒரு கேமரா தீர்மானித்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். கேமரா ஒரு கருவி, எப்படியான காட்சி வரவேண்டும் என்பது இருப்பது ஜி போன்றவர்களின் புத்தியில்..அதை ஒத்த சூழல் தோன்றும் போது அதை புகைப்படமாக்குகிறார்கள் மேலும் அப்படியான சூழலை தேடி வேட்கையோடு அலைகிறார்கள்.

இது பழக்கத்தின் அடிப்படையில் துரிதமாக அடிக்கடி நடந்தேறி விடுகிறது.

வெளிச்சத்தையும் இருட்டையும்
கோடுகளில் பிரித்தெடுத்து
அலைபாயும் எண்ணங்களை
நேராக்கி ஒற்றைச் சிந்தனையில்
"க்ளிக்கும் " காட்சிகள்...
கடும் தியானத்தை ஒத்தவை....!

நான் ஜி யிடம் சொன்ன போது சிரித்தான். நான் நேரடியாகவே ஜி யிடம் கேட்டு விட்டேன் ஏன் ஜி....? நீ படைப்பது உன்னிலிருந்து அது உனக்குள் பரவிக் கிடக்கும் இயற்கையின் உன்னதம். இதை ஏன் உலகம் தன்னிச்சையாக அங்கீகரிப்பதில்லை? எதற்காக நாம் போய் ஒவ்வொருவரின் அடி வருட வேண்டும்...?

நல்ல விசயங்கள் இந்த உலகின் தன்னிச்சையான தேவை இல்லையா? 

அது ஏன் எப்போதும் குறுக்கு வழியில் மார்க்கெட்டிங் செய்யப்படவேண்டும்.....? கேட்டு விட்டு ஜி யை பார்த்துக் கொண்டிருந்தேன். ஜி கடல் அலைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். சில விநாடிகளை திருப்தியாய் கடந்தது எங்களின் மெளனம்...! ஜி மெல்ல என்னை நோக்கித் திரும்பினான்....

கவி...உனக்கு ஒண்ணு தெரியுமா? நான் முதன் முதலா ஒரு பத்திரிக்கையில் வேலை பார்த்தப்ப என் கூட மூணு பொண்ணுங்க வேலை பார்த்தாங்க...அதுல இரண்டு பேரு அருமையான கலைஞர்கள் ஆனா பார்க்க சுமாராதான் இருப்பாங்க....! மூணாவது ஒரு பொண்னு பாக்க ரொம்ப லட்சணமாவே இருப்பா ஆனா கேமராவை கையில எடுத்து அவ எடுக்குற போட்டோஸ் எல்லாம் ஓ.கே ரகமாய்த்தான் இருக்கும். ஒரு காட்சியை அவ பாக்குற மாதிரியேதான் அவளால எடுக்கமுடியும் அல்லது அதான் அவளுக்குத் தெரியும்...பட்...அந்த பத்திரிக்கை ஆசிரியர் அவளைத்தான் தூக்கி வச்சு கொண்டாடுவான்....

அவளை கலைகளின் அரசின்னு வர்ணிப்பான், வாரம் தவறாம அவ எடுக்குற புகைப்படங்களை வலுக்கட்டாயமா பத்திரிக்கையில் வெளியிடுவான். பிரபலமான பத்திரிக்கை அது....வாசிக்கும் வாசிப்பாளன் கூட வெளியாகுற புகைப்படத்தைப் பற்றி அதிக அக்கறைகள் எடுத்துகறது கிடையாது. வாசகர்கள் திருப்தின்றது எப்பவுமே உண்மையான கலைப்படைப்புகளுக்கு அப்பாற்பட்டுதான் இருக்குது. இன்னமும் சொல்லப் போனா எந்த ஒரு பத்திரிக்கையையும் வாங்கின மூணாவது செகண்ட்ல நம்ம ஊர் வாசகர்கள் எடுத்துப் படிக்கிறது சினிமா செய்திகளைத்தான்....இதை நீ ஒத்துக்குவீல்ல...?

இப்படி தொடர்ச்சியா புகழாரங்கள் அந்த பொண்ணுக்கு போறதுக்கு காரணமா அவளோட அழகு இருந்துச்சு....அதை எப்படியாவது வளைச்சுப் போட ஆசிரியரோட புத்தி தொடர்ச்சியா போராடிக் கிட்டு இருந்துச்சு. இந்தப் போராட்டத்துல உண்மையான படைப்பாளிகள் நொந்து நூலாய்ப் போயிட்டோம்..

பாக்குற காட்சிய அப்டியே எடுக்குறது எல்லோருமே செய்ற விசயம் கவி....பட்...அதை தான் விரும்புற மாதிரி தன் புத்தியில ஜனிச்சு இருக்குற விசயம் மாதிரி எடுக்குறவன்தான் கலைஞன்.  இன்னும் சொல்லப் போனா புகைப்பட கலைஞன் அப்டீன்ற பதமே தப்பு.....புகைப்பட கவிஞன்னுதான் சொல்லணும்....!

மேலே நான் சொல்ற விசயம் ஒரு சின்ன உதாரணம். எல்லோரும் இப்டியான்னு கேட்டா ...எல்லோரும் அப்டி இல்லன்னு சொல்ற அதே நேரத்துல மிகைப்பட்ட பேர்கள் இப்டித்தான் இருக்காங்கன்னு என்னால அடிச்சு சொல்ல முடியும். கலை அப்டீன்றது சரி. அது நம்ம வாழ்க்கையா ஆக்காத வரைக்கும் சரி....உன்ன மாதிரி இருக்கறது ஓ.கே...பட் கலை என்பது முழுமையான வாழ்க்கையா மாறும் போது நமக்கும் நம்மள சுத்தி இருக்கவங்களுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்குதே கவி.....

கண்டிப்பா நம்ம படைப்ப முன்னிலைப்படுத்த கூவிக் கூவி விற்க வேண்டிய நிலைமை தன்னால வந்துடுதுதானே...? நிறை பேரை மஸ்கா அடி....! எப்பவும் பிரபலமான யாரால் காரியம் ஆகுமோ அவன் காலை பிடி....! பெண்கள் கிட்ட வழிஞ்சுகிட்டு, மொக்கையா எழுதுறவங்க கால்ல விழுந்து கிடந்துகிட்டு படைப்ப வாழ வைக்கிறேன்னு சொல்றவன எல்லாம் பாத்து நீங்க ஹீரோ சார், உங்கள மாதிரி முடியுமான்னு சொல்லு....! உங்க அழகுக்கு நிறைய பொண்ணுங்க மடியும்னு வாய் கூசாம சொல்லு.....

குறிப்பா நம்ம நாட்ல இருக்குற இரண்டு பெரிய கட்சியில ஏதாச்சும் ஒரு கட்சியில முழுசா சேந்துடாம ஆனா மறைமுகமா வலுவா சேர்ந்தே இரு. என்ன புரியலையா....அரசியல் இல்லாம ஒரு இம்மி கூட நம்ம ஊர்ல நகராது கவி. கவியரசு, கவிச்சக்கரவர்த்தி எல்லாம் தன்னிச்சையவா திரிஞ்சாங்க...யாரோட பாக்கெட்லயோதான் இருந்தாங்க....

வாழ்க்கைய, வாழ்க்கையா பார்க்கும் போது இது எல்லாம் செஞ்சுதான் ஆகணும் கவி. பாரதி சாகுறவரைக்கும் ஒரு நாதியும் அவனை சீண்டலை....ஆனா பாரதி இல்லேன்னா இன்னிக்கு நமக்கு இப்பேர்பட்ட கவிதைகள் கிடைச்சு இருக்காது.....!ஏதோ ஒரு தளத்துல இருந்த தமிழ்க் கவிதைகள் அப்டீன்ற பதத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த சரித்திர புருஷன் அவன். முழுக்க முழுக்க படைப்பாளியின் கர்வத்தோடவே ஆனா சிக்கல் இல்லாத தெளிவான சமூக, காதல் கவிதைகளை கொட்டி இரைச்சுட்டுப் போய்ட்டான்....அவன் எப்பவும் யார் கால்லயும் போய் விழுந்தது இல்லை....

அதனாலேயே கடைசிவரை பட்டினியாவே இருந்தான். அவனை உலகம் பாராட்டும் கவி...பட் அவன் குடும்பமும் அவன் வாழ்க்கையும்....ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டதும் பொய் இல்லைதானே....?????

ஏதேதோ செய் ஆனால் அதை நேர்மைக்கு புறம்பாகவும், அடுத்தவரை பாதிக்கும் வகையில் செய்யாதே....உன்னை மேல ஏத்திக்க உன் திறமையால நீ முயற்சி பண்ணு. ஒரு சரியில்லாத படைப்பை விளம்பரப்படுத்திக்கவும், மேல வரவும் ஒருத்தன்   குறுக்கு  வழியில முயற்சி பண்ணும் போது.....

நல்ல விசயங்கள மேல கொண்டு வரதுக்கு நாம குறுக்கு வழியை பின்பற்றவும், ஜால்ரா அடிக்கவும், முகஸ்துதி பாடவும் செய்றது தப்பே இல்லை...கவி. ஒரே ஒரு விசயம் சொல்றேன் கேளு....

கவிதைய பேப்பர்ல மட்டும் எழுது.....கொஞ்ச நாளைக்கு நீ மேல வர்ற வரைக்கும் கவிதையா வாழ முயற்சி பண்ணாத...ஏன்னு கேட்டா முதல்ல நீ ஜெயிக்கணும் அதனால வாழ்க்கைய வாழ்க்கையா பாரு....ஜெயிக்க வேண்டிய பெரிய போர்க்களமா பாரு....எதிர்த்தாப்ல வர்ற எல்லா பிரச்சினையும் நேருக்கு நேரா எதித்து நின்னு அடிச்சு துவம்சம் செய்....! உன் ஆழமான தனிமையான மெளனமான நேரங்களை சப்தமில்லாமல் கவிதையாலும் கட்டுரையாலும், கதையாகவும் அனுபவங்களைக் கொண்டு நிரப்பு...சமூகக் கோபங்களை நெருப்பாய் எரிய விடு.....

என்னடா கவி.. நான் பேசிட்டே இருக்கேன் நீ சைலண்ட்டாவே இருக்க...?!!!!!

இல்ல ஜி.....!!! நீ சொன்னது எல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். ஹ்ம்ம்ம்ம்ம்.... நாளைக்கு நீ சொன்ன மாதிரி அந்த கிஃப்ட்ட வாங்கிட்டு உன்னோட பத்திரிக்கை ஆசிரியர சந்திக்க வர்றேன். வர்ற சனிக்கிழமை ஈவினிங்........அவர் கூட ஒரு சின்ன பார்ட்டி அரேஞ்ச் பண்ணிடலாம்.....

" மச்சி...ஐயம் சாரிடா.... வேற வழியில்லை வாழ்க்கையில ஜெயிக்கணும்னா இது எல்லாம் வேணும்டா....." ஜி என் தோளில் ஆதரவாய் கை வைத்தான்....

" மோகத்தை கொன்று விடு அல்லால்
எந்தன் மூச்சை நிறுத்தி விடு...
தேகத்தை சாய்த்து விடு அல்லால்
அதில் சிந்தனை மாய்த்து விடு...
யோகத் திருத்தி விடு அல்லால்
இந்த ஊனைச் சிதைத்து விடு...
ஏகத் திருந்துலகம் இங்குழனைதையும் செய்பவளே.

பந்தத்தை நீக்கி விடு அல்லால்
உயிர் பாரத்தை போக்கி விடு...
சிந்தையைத் தெளிவாக்கு அல்லால்
இதை செத்த உடலாக்கு...
இந்த பதர்களை ஏன் எல்லாம்
என எண்ணி இருப்பேனோ...
எந்த பொருளிலுமே உளேன்நேன்று இயங்கி இருப்பவளே.

உள்ளம் குளிராதோ பொய்யாலவா
ஊனம் ஊழியதோ...
கள்ளம் உருகாதோ அம்மா பற்றி
கண்ணீர் பெறுகிறதோ...
வெள்ள கருணையிலே இன்ன சிறு
வேட்கை தணியாதோ...
விளர்கரியவளே அனைத்திலும் மேவி இருப்பவளே.....! "

பாரதி எனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்...!


தேவா. சு

Photo Courtesy: ayashok photography



Friday, May 18, 2012

தமிழரின் தாகம்...தமிழீழத் தாயகம்..!



ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஆரம்பிக்கும் போதே நெஞ்சு பதை பதைப்பதை தவிர்க்க முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய பெரும் அவலத்தில் அழிந்த நம் உறவுகளின் அழுகைச் சத்தம் மானமுள்ள தமிழனின் காதுகளில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். அயோக்கித்தனமாய் உலக நாடுகளை ஒன்று சேர்த்துக் கொண்டு பிச்சை எடுத்து ஒரு இன அழிப்பை நடத்தி விட்டு விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என்று கொக்கரிக்கிறான் மானங்கெட்ட ராஜபக்சே...!

எத்தனை எத்தனை நிகழ்வுகள்.....2009 மே17, 18, 19 க்குப் பிறகு. பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்ற வாதங்களில் எல்லாம் இப்போது யாரும் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. நம்பிக்கை இருப்பவர்களுக்கு அவர் இருக்கும் கடவுளாகிப் போனர். அவர் இருக்கிறார், கண்டிப்பாய் வருவார் என்ற நம்பிக்கை இங்கே ஓராயிரம் பிரபாகரன்களை உருவாக்கிக்தான் கொண்டிருக்கிறது.

பிரபாகரனையும் அவர் கட்டியெழுப்பிய விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் நேசிக்க நீங்களும் நானும் தமிழனாய்த்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஒரு நல்ல மனிதனாய் இருந்தால் போதும். நேர்மையான, சுய சிந்தனை உடைய, காழ்ப்புணர்ச்சிகள் அற்ற, உணர்வுகள் கொண்ட ஒவ்வொரு மனிதனும் பிரபாகரன் என்னும் மாவீரனை தனது வழிகாட்டியாக, கடவுளாக பார்க்கத்தான் செய்வார்கள். 

தன் இனம் வாழ வேண்டும் என்று கருவி ஏந்தி போராடி தன் மக்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து கடைசிவரை களத்தில் மக்களோடு மக்களாக நின்ற ஒரு பெருவீரன் மீண்டும் வரவேண்டும் என்று எண்ணுவதில் எந்த தவறும் இல்லை....அவர் இல்லை என்று சொல்பவர்களின் நாக்குகளை வெட்டிப் போடவேண்டும் என்று நமக்குத் தோன்றுவதும் இயல்புதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

எது எப்படி இருந்தாலும் நடந்து முடிந்த ஈழப்போர் நமக்கு பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இந்திய இறையாண்மைக் கத்தியின் பதம் எப்படி இருக்கும் என்று அறிந்தோம், மனித நேயம் முக்கியம் என்று உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் அமைப்பு யுத்த சமயத்தில் எப்படி நடந்து கொண்டது என்றும் அறிந்தோம், இந்திய தேசம் முழுமைக்கும் இருந்த  மக்களும் மற்ற மாநில அரசியல்வாதிகளும் அண்டை தேசத்தில் ஒரு பெரு இன அழிப்பு நடந்த போது என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெளிவாய் உணர்ந்தோம்...

எல்லாவற்றுக்கும் மேலாக எம் தாய்த் தமிழகத்தின் மானமிகு தமிழினத்தின் தலைவர்களும், புரட்சித் தலைவிகளும் தமிழ் இரத்தம் ஈழத்தில் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்த போது யுத்தத்தை நிறுத்த என்ன மாதிரியான முயற்சிகளை எடுத்தார்கள் என்பதை நாம் அறிந்ததுதான்...வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமான விடயம். நயவஞ்சகமாய் தமிழர் நலம் என்பதை வெற்று அரசியலாய் கொண்டிருந்த, சுயநல அரசியல் செய்து சுகபோகங்களில் திளைத்துக் கிடந்த, ஜந்துக்களையா நாம் நமது தலைவர்களாக எண்ணிக் கொண்டு மாற்றி மாற்றி அரியணையில் ஏற்றினோம் என்று எண்ணிய போது அவமானம் பிடுங்கித்தான் தின்றது....!

ஈழத்தில் நடந்த அத்தனை கொடுமைகளையும் உலகெங்கும் இருக்கும் ஊடகங்களும், வலைப்பூக்களும், இணையதளங்களும் தெளிவாய் விளக்கி எழுதிக் கொண்டிருந்த போது தாய்த் தமிழகத்தில் மானாட மயிலாடவும், ஜாக்பாட்டும் பார்த்துக் கொண்டு தாய்த் தமிழன் தொடை தட்டி சிரித்துக் கொண்டிருந்தான். மிகச் சிலரே..........மிக மிகச் சிலரே மக்களிடம் ஈழப்பிரச்சினையை கொண்டு சேர்க்க முயன்ற போதும் அப்போதைய தமிழக அரசு அதை தனது அதிகாரத்தால் முடக்கிப் போட்டது, குரல்வளைகளை நெறித்துப் போட்டது குறிப்பாக தமிழகத்தில் எழுச்சி வந்து விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தது.

தமிழர்களுக்கு முகத்தில் அறைந்தாற்போல எதுவும் நடந்தாலே தவிர....பெரும்பாலும் எதுவும் உறைப்பதில்லை என்ற கூற்றினை உறுதி செய்யும் வண்ணம் முத்துக்குமார் என்னும் ஒரு விதை இந்த பூமியில் கருகி விழுந்த போதுதான் கண் விழித்து பார்த்து .......என்ன ஆச்சு...? ஏன்... தீக்குளிக்க வேண்டும் என்று நாம் கேட்கத் தொடங்கினோம். முத்துக் குமார் செத்துவிழுந்த போதும் இந்திய அரசுக்கு மாமா வேலை செய்த ஊடகங்கள் அதைக் கூட காட்சிப்படுத்தவில்லை.

முடிந்து விட்டது...! எல்லாமே முடிந்து விட்டது.....! இனி அதை பேசி பிரயோசனம் இல்லை நண்பர்களே...! அழுது அழுது கண்கள் சிவந்தது போதும்... இனி மனிதர்களை உற்று நோக்கி அவர்களின் கபட நாடகங்களை அறிந்து சரியான தலைமையை தமிழ் நாட்டில் தேர்ந்தெடுப்பதோடு, இந்திய மைய அரசிலும் வலுவாக அந்த கட்சியை வலிமைப் பெறச் செய்வதுமே  நாம் செய்ய வேண்டிய அரசியல். தமிழகத்தில் இனி தமிழர்களுக்கான ஒரு பாரிய அரசியலை செய்யாமல் எந்த ஒரு கட்சியும் இனி பிழைத்து எழ முடியாது என்பதை ஈழப்போர்தான் முடிவு செய்தது என்பதையும் நாம் உணர வேண்டும்.

ஓட்டுக் கேட்டு வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இனி தனித் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று பேசுவார்கள்...., நாங்கள் வெற்றி பெற்றால் தமிழர் நலம் பேணப்படும், ஈழத்தின் மக்களின் விடியலுக்கு தனித் தாயகம் பெறுவதற்கு நாங்கள் போராடுவோம் என்று கையேந்திப் பிச்சை கேட்பார்கள். ஆமாம்....ஈழம் மெளனமாய் அதை சாதித்து இருக்கிறது. பிரபாகரன் என்ன சாதித்தான் என்று கேட்கும் நயவஞ்சகர்களிடம் சொல்லுங்கள்...

ஈழம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தாமல் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இனி பிழைத்தெழ முடியாது.....என்பதை உறுதி செய்தவன் பிரபாகரன் தான் என்று...! ஈழப்போரில் இரத்தம் குடித்த  கொலைகார காங்கிரஸ் கட்சி....திருடனுக்கு தேள் கொட்டியது போல நின்று கொண்டிருக்கிறது இப்போது..., தமிழகத்தின் தனது கூட்டணி சகாவான திமுகழகத்தின் தலைமை மீண்டும் டெஸோ என்னும் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை தூசு தட்டி எடுத்து இருக்கிறது....

கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா ஜெயித்திருக்க வேண்டியவரே அல்ல....என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும்....ஆனாலும் மிருகபலத்தோடு ஜெயித்தார் என்பதற்கு முழு முதற்காரணமாக ஈழப்பிரச்சினையில் திமுகழகம் நடந்து கொண்டதுதான் காரணம் என்பது திமுகழகத்தில் இருப்பவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஊழலை எல்லாம் யோசித்து தமிழன் எப்போதும் பெரிதாய் எடுத்துக் கொண்டதே இல்லை...அப்படி எடுத்துக் கொண்டிருந்தால் புரட்சிச் தலைவி இன்னும் முதல்வராய் புட்பால் மேட்ச் ஆகிக் கொண்டிருக்க முடியாது.....அவ்வளவு மெகா ஊழல்களையும் செய்தவர் அவர் என்பதோடு மட்டுமில்லாமல் இன்னமும் கோர்ட் படியேறிக்கொண்டும் இருக்கிறார்.

திமுகழக ஆட்சியில் நடந்தது என்று சுட்டிக்காட்டும் அத்தனை தவறுகளும் எப்போதும், இப்போதும் ஏன் இன்னும் சொல்லபோனால் இன்னும் அதிகமாகவே அதிமுக ஆட்சியில் நடந்து கொண்டுதானிருக்கிறது என்றாலும்....ஈழப் போர் நடந்து கொண்டிருந்த போது திமுக தலைமை நடந்து கொன்ட விதத்தை மனசாட்சியுள்ள எந்த தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்..காரணம் திமுகழகத்தின் மீதும் அதன் தலைமை மீதும் ஒவ்வொரு தமிழனும் வைத்திருந்த எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பொய்த்துப் போனதுதான்.

கடந்த சட்ட மன்றத் தேர்தலில் ஈழம் மெளனமாய் தனது ஆளுமையைக் காட்டியது. இனி வரப்போகும் எல்லா தேர்தல்களிலும் ஈழம் தமிழகத்தில் விசுவரூபமெடுக்கும், ஈழம் என்னும் வேரூன்றி தமிழர் நலம் பற்றி பேசாத எவனொருவனும் இங்கே இனி அரசியல் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சியே தனித் தமிழ் ஈழத்தை ஆதரித்து பேசினாலும் ஆச்சர்யமில்லை....

2009 மே 17, 18, 19களில் நம் உறவுகள் வெறுமனே மரித்து மட்டும் போய் விடவில்லை, இதோ மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் உயிராய், உணர்வாய் நின்றாடிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தை அரசியலாக்கி ஓட்டுக்களாய் மாற்ற முயலும் நயவஞ்சகர்கள் யார் என்று இனி யாரும் சொல்லி நமக்குத் தெரிய வேண்டியதில்லை, நான்கு நாட்களில் போரை நிறுத்தினேன் என்று விளம்பரம் செய்தவர்களும் போர் என்றால் மனிதர்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று சொன்னவர்களும்....ஈழம்......ஈழம்.....ஈழம் என்று இனி விடாமல் முழங்கிக் கொண்டிருப்பார்கள்....! அப்படி முழஙினால்தான் அவர்கள் பிழைப்பு ஓடும்....!

கொலை பாதகங்கள் செய்த கொடும் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்த இலங்கையில் நாங்கள் தமிழர்கள் நெஞ்சு நிமிர வாழ வைப்போம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நமது கால்களை வந்து நக்குவார்கள்....நாம் ஏமாறக் கூடாது. 

"எங்கள் துப்பாக்கிக்களை நாங்கள் தற்காலிகமாக மெளனிக்கச் செய்கிறோம்.... "

என்று தமிழ் ஈழ தேசிய இராணுவமான விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவித்து விட்டு ...மொத்தமாய் மெளனித்து விட்டது என்று முட்டாள்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளை கொடி ஏந்தி சென்றவர்களை வதைத்துக் கொன்ற கொடூரத்தையும், வேதியல் கொத்தெறி குண்டுகளை வீசி எம்மக்களை பொசுக்கிப் போட்ட அவலத்தையும், கருகிக் கிடந்த பிள்ளைகளையும், காயம்பட்டு மருத்துவ உதவிக்காய் கெஞ்சிக் கொண்டிருக்கையில் மருத்துவமனையில் குண்டு போட்டு அழித்த மிருகச் செயல்களையும்....

நாம் மறந்து விடக் கூடாது. நம் பிள்ளைகளுக்கு எல்லாம் தமிழ் ஈழத்தில் நடந்த கொடுமைகளையும் அங்கே யார் யார் எப்படி வஞ்சித்தார்கள் என்பதையும், அநீதி எப்படி எல்லாம் ஆட்டிப்படைத்தது என்பதையும் நாம் ஊட்டி வளர்ப்பதோடு.....பிரபாகரன் என்னும் பெரும் வீரன் ஏன் துலக்கு ஏந்தினான்..? எப்படி எல்லாம் நம் இனத்தை நேசித்தான்..?  எவ்வளவு நுட்பமான மூளைக்கு சொந்தக்காரன் அவன், அவனது வீரம் எத்தகையது, பாசம் எத்தகையது..... என்பதை எல்லாம் உணர்வாய் நாம் அறிவித்தே வளர்க்க வேண்டும்.

காலத்தின் போக்கில் எல்லாம் மாறும்........அந்த மாற்றத்தில் நமது உணர்வுகளின் ஒட்டு மொத்த வீரியமும் ஒன்று கூடி நமக்குத் தாய்த் தமிழ் ஈழத்தைப் பெற்றெடுத்து கொடுக்கும் என்ற உறுதியோடு போரின் போது வீரமரணம் அடைந்த எம் இனத்திற்கு வீரவணக்கத்தையும் எமது அஞ்சலிகளையும் செலுத்தி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

தமிழரின் தாகம்....தமிழீழத் தாயகம்....!


தேவா. சு



Saturday, May 12, 2012

மாயா...மாயா....எல்லாம் மாயா!



இல்லாத இடத்திலிருந்து இருப்பவராய் நம்மை ஜனித்துக் கொடுத்தது ஒரு சூனியம். சூனியத்தின் பிள்ளைகள் சூட்சுமத்திலிருந்து பிழிந்தெடுத்த கனவின் வண்ணமய காட்சிகளாகி கை கால்கள் முளைத்து ஐம்புலனென்னும் பொறிகள் கொண்டு பெற்ற அனுபவத்தை மனமாக்கி, புத்தியில் நினைவுகளாய் தவழ்ந்து கொண்டு படைக்கிதிங்கு ஓராயிரம் பொய்மைகளை....

அறிந்திராத கடவுளை அறிந்த பொழுதில் பட்டுப் போய்விடும் அவயங்களை ஏந்திக் கொண்டு அங்கும் இங்கும் வழிபாடுக்காய் கட்டிடங்களையும், கருத்துக்களுக்காய் வேதங்களையும் சுமந்து கொண்டு மதநாடகம் நடத்தும் பித்துக் கூட்டங்கள் பெற்றுப் போட்ட பிள்ளைகள் நிரம்பிய பூமியாய்ப் போனது.....இந்த சுழல் பந்து.

ஆசையின் வேர்கள் நீண்டு கொண்டே இருக்க அதிகாரமென்னும் கொம்புகள் முளைத்து அங்கும் இங்கும் மிருக சாயலில் அலையும் வேடிக்கை மனிதர்கள் போதும் போதுமென்றளவிற்கு பொருள் ஈட்டி பின்னொருநாள் தீக்கிரையாகிப் போகின்றனர் இல்லையேல்...மண்ணில் மட்கிப் புழுவாகி நெளிந்து கொண்டிருக்கின்றனர்....

மறுமையில் சுகமனுபவிக்கும் ஆசையில் மதங்களுக்குள் புகுந்து வேடமிட்டுக் கொண்டு நல்லவர் வேடம் போடும் வேகத்தில் எத்தனை எத்தனை இயல்புகளை உடைத்துப் போடுகின்றனர் இவர்கள்....! இறுமாப்பில் பேசித் திரியும் மானுடர்கள் சாலை கடக்கையில் சட்டென்று ஒரு கன ஊர்தி அவர்கள் மீதேறி இறங்கினால் என்னவாகும்...?

யோசித்துப் பார்க்க நேரமில்லாமல்....தலைகளில் எப்போதும் அரசியல் விதண்டாவாதங்களையும், மதப்பிடிப்புக்களையும், நான் அறிந்தேன், நான் மட்டுமே அறிந்தேன் என்ற இறுமாப்பில் அலையும் மூட கள்ள படைப்பாளிகளையும் என்ன செய்யும் இந்த வாழ்க்கை....?

கழுத்தெலும்புகளை உடைத்து ஒருவேளை பாடம் கொடுக்கலாம், இடுப்பிலிருக்கும் சக்தியினை உறிஞ்சி நிற்க முடியாமலொரு பாடம்கொடுத்து நீ ஒன்றுமில்லை என்றும் சொல்லிக் கொடுக்கலாம், பெரும் காய்ச்சலில் வாய் கசக்க வீட்டு மூலையில் வாய் கோணி படுக்கவைத்து....பல்லிளித்துக் கொண்டே பாடங்கள் சொல்லலாம்...யார் கண்டது..? இறுமாப்பினை அறுத்தெறிய வாழ்க்கை யாதொரு வேடமிட்டும் வரலாம்.....

பகுத்தறிவு புகுத்திக் கொடுத்த விஞ்ஞானத்தின் வெருண்ட ஓட்டத்தில் சமைந்து கிடக்கும் நவீன ஊடகங்களில் ஊர்ந்து செல்லும் மானிடக்கூட்டத்தில் பலர் நாயைப் போலவே திரிகின்றனர். எனக்கு கிடைத்த உருவம் நானா படைத்தது? எனக்கு கிடைத்திருக்கும் சிந்தனைகள் என்ன நான் தனித்தமர்ந்ததால் கிடைத்ததா? எங்கிருந்து வருகிறது மட மானுடர்களுக்கு தான் அழகென்ற மமதையும், தான் அறிவாளி என்ற புத்திக்கோளாறும்....! சுய தம்பட்ட மைதானமாய் போயிருக்கும் சமகால சமூக இணைப்பு வெளிகளில் ஊடுருவிச் செல்லவே கூசித்தான் போகிறது நியாயவான்களின் உடல்கள்...

சுயதம்பட்ட தேற்றத்திற்கா கருத்துப் பகிர்தல்....? வழிகாட்டுபவனுக்கு எப்படி வரலாம் இறுமாப்பு...? வழிகாட்டுகிறேன் என்று கூறுபவன் திருப்தி என்னும் நிறைவை அல்லவா கொள்ள வேண்டும். இருக்கும் வழியை காட்டுவதற்கு பெருமைகள் பேசும் பித்தனை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்.....? அல்ப ஜந்துவாகத்தானே....? அப்படியேதான் கருத்துப் பகிர்தலை அகங்காரமாய் எடுத்தியம்பும் வீணர்கள் கூறுவதை எல்லாம் காலம் பல முறை பல சூழல்களில் ஏற்கனவே பகிர்ந்துதானே சென்றிருக்கிறது....

எங்கிருந்து எடுக்கிறான் ஒரு திறமை சாலி தனக்கான திறனை...? இந்த பிரபஞ்சத்தின் அறிவிக்கப்படாத அல்லது அறிந்திடாத மூலைகளிலும் கூட விரவிக் கிடக்கும் பேரறிவுகளில் இருந்துதானே...? பகுத்தறிவும், அஞ்ஞானமும் விஞ்ஞானமும் புதிதாய் உருவானது அல்ல....அது எப்போதும் இங்கே இருப்பது. இவை எல்லாம் ஒன்று கூடிய பிரமாண்டத்தை புரிந்து கொள்கையில், எதை பகிர்ந்தாலும் அதை நான் என்னும் கட்டுக்குள் இருந்து பகிர்ந்தேன் என்ற் அபத்த அறிவு அழிந்தேதான் போகிறது.

வாழ்க்கை எப்போதும் இருப்பது. யாரோ எப்போதோ எழுதியதை நான் இன்று இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். யாரோ செய்த அரசியலை யாரோ இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். எவனோ செய்த புரட்சியின் தாக்கத்திலேதானே இந்தப் பூமியில் ஓராயிரம் புரட்சிகள் வெடித்தெழுந்தன...? எல்லா உணர்வுகளின் மூலமும்....ஜனித்த இடமென்று ஒன்று இருக்கும்தானே....? அந்த பெரு உணர்விலிருந்து வெடித்து சிதறிய பிச்சைதானே நீங்களும் நானும் பகிரும், பழகும், செயற்படுத்தும் எல்லா செயல்களும்....

மாயையின் பிள்ளைகளே.......!!!! அழிந்து மட்கப்போகும் ஒன்றுமில்லாததின் சக்கரவர்த்திகளே...!!!! சக்தியை காலம் உறிஞ்சிக் கொண்டபின் பலமின்றி கண்ணீர் வழிய கடந்த காலத்தில் செய்த தவறுகளை எண்ணி கதறப் போகும் பொய்களே....

இறுமாப்புக்களை அழித்தொழியுங்கள்...! இல்லாததிலிருந்து நாம் வந்திருக்கிறோம்.  நாம் யாருமில்லை என்று உணருங்கள். வாழ்க்கை மாயை....! இந்த மாயையிலொரு சண்டையும், வீண் ஜம்பமும் பொய் என்றுணருங்கள்....!

மாயா...! மாயா...! எல்லாம் மாயா..........சாயா...சாயா....எல்லாம் சாயா!

தேவா. சு


Thursday, May 10, 2012

ரகசியத்தின் சுவடுகள்...!




























சாத்தானை படைத்த எரிச்சலில்
மனிதனை படைக்கவே கூடாது
என்ற கடவுளின் ஆசையை உடைத்து விட்டு
மனிதனை படைத்தே விட்டான் சாத்தான்...
கடவுளைக் கொன்று விட்டு;
மனிதனோ மீண்டும் மீண்டும்
சாத்தானை படைத்து விட்டு
அதற்கு கடவுள் என்று பெயரிட்டுக் கொண்டிருக்கிறான்;

ஆமாம்...

கடவுளை மனிதன் படைத்து விடக் கூடாது
என்ற கடவுளின் ஆசை தோற்றுப் போனதில்
சாத்தான் மீண்டும் மீண்டும் ஜெயித்துக் கொண்டிருக்கிறான்
கடவுள் என்ற பெயரோடு.....!


                       ***



அந்தக் கதையை நான் வாசிக்கையில்
கதையின் நாயகியின் பெயர்
அவளுடைய பெயராய் இருந்தை வாசித்து
புத்தகத்தை மடக்கி விட்டு...
அவளை நினைத்துக் கொண்டிருந்ததைப் போலவே
அந்தக் கதையின் நாயகனும்
கதையில் ஒரு புத்தகத்தை வாசித்து விட்டு
அதில் கதாநாயகியின் பெயர் வந்த இடத்தில்
புத்தகத்தை மடக்கி விட்டு
நான் வாசித்த கதையின் நாயகியை நினைத்துக் கொண்டிருந்தான்...
நானும் அந்தக் கதையின் நாயகனும்
கதையில் வரும் நாயகிகளை நினைக்கவே இல்லை....
கதை முடியும் வரை...!


தேவா. சு