Skip to main content

நினைவுத் தேம்பல்கள்..!















நினைவுகளின் முனைகள்
மழுங்கிப் போன ஒரு தினத்தில்
ஓய்வாகக் கிடந்தது என் பேனா...
வார்த்தைகளில் ஆக்ரோஷ உரசல்களிலும்
காதல் சரசங்களிலும் அலுத்துப் போயிருந்த
... என் டையிரின் பக்கங்கள்..
கலவி முடித்த பெண்ணாய்
கவிழ்ந்து கிடக்க..
நிரம்பலின் வெறுமையில்
எங்கோ லயித்துக் கிடக்கிறேன்..நான்..!

                    ***


இன்னமும் சொட்டிக் கொண்டிருக்கிறது..
தாழ்வாரத்தில் மழை நீர்...!
மழை பெய்த அடையாளம்
இன்னும் சற்று நேரத்தில் மறையக் கூடும்..
மேகங்கள் விலகி....
பளீரென்று வெயில் அடிக்கலாம்...
பறவைகளும், மனிதர்களும்
தங்கள் கூடு விட்டு 
மீண்டும் இயல்புக்கு திரும்பலாம்...,
எங்கோ தேங்கிக் கிடக்கும் நீரின்
கடைசித் துளியை 
நிலத்தின் உஷ்ணம் விழுங்கியதோடு
மழையின் தடம் மறைந்தே போகலாம்...
ஆனால் சற்று முன்...
இங்கொரு பலத்த மழை பெய்தது...,
அதன் சாரலில் தொட்டு
நான் என் உயிரினை....
நனைத்து நனைத்து...
அவளுக்காய் ஒரு கவிதை 
செய்து கொண்டிருந்தேன்..!


தேவா.  சு

Comments

தங்கள் வரிகளின் வழியாக மண்வாசனை வருகிறது .
காதல் ரசம் சொட்டும் கவிதை ...அருமை!
//...ஆனால் சற்று முன்...
இங்கொரு பலத்த மழை பெய்தது...,
அதன் சாரலில் தொட்டு
நான் என் உயிரினை....
நனைத்து நனைத்து...
அவளுக்காய் ஒரு கவிதை
செய்து கொண்டிருந்தேன்..!//

அருமையான கவிதை...

காதல் மழை பூத்தூறலாய்...
//...ஆனால் சற்று முன்...
இங்கொரு பலத்த மழை பெய்தது...,
அதன் சாரலில் தொட்டு
நான் என் உயிரினை....
நனைத்து நனைத்து...
அவளுக்காய் ஒரு கவிதை
செய்து கொண்டிருந்தேன்..!//

அருமையான கவிதை...

காதல் மழை பூத்தூறலாய்...
ஹேமா said…
உயிரைத் தொட்டுப் பாடிச் செய்த காதல்....அழகுதான் தேவா !
இறுதி வரிகளில் லயித்து விட்டேன்...

அற்புதம் தேவா சார்...
Shankar M said…
நிரம்பலின் வெறுமை....நினைவுகளை வறுமைக்கு கொண்டுபோனதா ? அற்புதம் தோழா....